home

 உண்மை !                                         உழைப்பு!                                      உயர்வு!

     


எவர்வந்தாலும் எதிர்த்து நிற்கும் சிவகங்கை

சிவகங்கைச்சீமை-எங்கள் சிவகங்கைச்சீமை

எவர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சிவகங்கைச் சீமை

---------------- ------------ -------------- --------------- - ----------- --------------

அன்றும் இன்றும் என்றும் எந்த அன்னியர்க்கும் அடிமை இன்றி தன்னையாண்டு தான் வளர்த்த சிவகங்கைச் சீமை

- கவியரசு கண்ணதாசன்

வரலாறு

  • 1730இல் முழுமையான தலைநகரமாக சிவகங்கையை ஆக்கும் முயற்சியில் சசிவர்ணர் முழு மூச்சில் ஈடுபட்டார். தொடக்கத்தில் கண்டபடி, ஞானியாரின் வாழ்த்துரைப்படி ஊர் நடுவே குளம் வெட்டப்பட்டது.அதன் மண்போடப்பட்ட மேட்டில் அரண்மனை யும் கோட்டையும் அமைக்கப்பட்டன. மதில் 18 அடி உயரம் கொண்ட தாகும். உள்ளே கருப்புக்கட்டிச்சாறும் வரகுமாறும் மண்ணும் கலந்து கட்டப்பட்ட சுவர்கள். குண்டு பாய்ந்தால், உள்ளுக்குள் செம்மிக் கொள்ளுமே தவிர,குண்டு சிதறாது. மண் சுவர்களின் மகிமை இது! கும்மியில் குறிப்பிட்டுள்ளபடி வடகிழக்கு அக்கினி மூலையில் சசிவர் ணர் கட்டிய ஈசுவரன்கோயில் அழிந்துபோயிருக்க வேண்டும். இன்று சசிவர்ண ஈசுவரன் கோவில் அரண்மனைக்கு நேர் கிழக்கே பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது. தவிரவும், இன்றுள்ளசசி வர்ணேசுவரர்கோயில் முத்துவடுக நாதரால் கட்டப் பெற்றதாகும்.

  • சிவகங்கை முற்றிலும் சசிவர்ணர் காலத்தில் தோற்றம் எடுத்ததல்ல. அதற்குமுன் சிறு ஊராக இருந்தது. அவர்காலத்தில் நகரமாக, தலை நகரமாக மேம்பட்டது . அதன் ஆதிப்பெயர் பற்றிய ஆய்வு இதனைப் புலப்படுத்தும். இதன் ஆதிப்பெயர் குழந்தாபுரி என்பதாகும்.

  • 'சிவகங்கை யென்னும் குளமொன்று அந்நகரிலுள் ளது. அது மிகவும் சிறப்புள்ளதுபற்றி அதன் பெயரே அந்நகருக்கும் அமைந்தது. இங்ஙனமே தீர்த்தப் பெயரையுடைய ஊர்கள் தமிழ்நாட்டில் உண்டு. இக்காரணம் பற்றியே சிவகங்கை இந் நூலில்(மான் விடு தூது ) குளந்தை யென்னும் பெயரால் பாராட் டப்படுகிறது.“ -என்று டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் சிவகங்கையின் ஆதிப் பெயர் பற்றி எழுதியுள்ளார்.

  •  ழ' கரம்ள ' கரமாகி குளந்தை , குளந்தாபுரி, குளநகர் என்றெல்லாம் சிவகங்கை இலக்கியங்களில் பெயர் கண்டிருக்கிறது. சிவகங்கை அரசகுடும்பத்தில் குழந்தை ராணி, குழந்தை பாண்டித் தேவர் காத்தம நாச்சியார் என்ற குழந்தாபுரி நாச்சியார். 08 குழந்தா புரிச்சாமி 7 என்றெல்லாம் பெயர்கள் இருந்ததும் இதன் காரணமாகத் தான்.

  • சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது . இம்மாவட்டமானது மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என எம்ஜிஆர் முதல்வராக இருந்த போதும், அவருக்கு பின்பு தேவர் திருமகனார் மாவட்டம் என கருணாநிதியும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் என ஜெயலலிதாவும் என இவ்வாறு ஒரு மாவட்டத்திற்கு மூன்று முதல்வர்களும் பசும்பொன் தேவரின் பெயரையே திரும்ப திரும்ப மாற்றி வைத்தனர். பின்னர் கடைசியாக சிவகங்கை மாவட்டம் ஆனது.

வருவாய் வட்டங்கள்

சிவகங்கை மாவட்டம், இரண்டு வருவாய் கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 39 உள்வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது.[1]

வருவாய் கோட்டம்

வருவாய் வட்டம்

(எண்ணிக்கை)

வருவாய் வட்டம்

வருவாய் கிராமம்

சிவகங்கை கோட்டம்

5

சிவகங்கை

காளையார்கோவில், மானாமதுரை

இளையான்குடி

 திருப்புவனம்

267

தேவகோட்டை கோட்டம்

4

 தேவகோட்டை

 காரைக்குடி,

 திருப்பத்தூர்

சிங்கம்புணரி

255

மொத்தம்

 

9

521

பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்ததில் சிவகங்கை மாவட்டத்தின் பங்கு

  • சிவகங்கையை சேர்ந்த இராமச்சந்திரனார் கலந்துகொண்ட மாநாடுதான் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு. அந்த மாநாட்டில் டபிள்யு.பி.ஏ.சவுந்திரபாண்டியனார், பி.டி.ராஜன் இவர்களெல்லாம் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டில் சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரப்பட வேண்டும். பெற்றோர்களின் சொத்தில் ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெரியார் முன்னிலையில், நம்முடைய இராமச்சந்திரனார் போன்றோர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். 1989 ஆம் ஆண்டு தான் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானம் சட்டமாக ஆக்கப்பட்டது.

எவர்வந்தாலும் எதிர்த்து நிற்கும் சிவகங்கை சீமை

(நன்றி  சிவகங்கைச்_சரித்திரக்_கும்மியும்_அம்மானையும் – டி.சந்திரசேகரன் , பதிப்பகம்  -  அரசு பதிப்பகம் சென்னை)

  • 1920 இல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். வழக்கறிஞர்களை நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும்படியும் அரசு அலுவலரை அரசுப்பதவிகளைத் தூக்கி எறியும்படியும்,அந்நியத் துணிகளை அணிவதை விட்டுவிடும்படியும் பொதுமக்களுக்கும் அறை கூவல் விடுத்தார்; தமிழ்நாட்டில் முதலில் சூடு பிடிக்கவில்லை.  ஆனால் 1921 செப்டம்பரில் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக சிவகங்கையில் நிகழ்ந்த விந்தை நிகழ்ச்சியை மாவட்ட கெசட்டியர் பதிவு செய்து வைத்துள்ளது. இந்த வேலையை விட்டால் வேறு எதுவும் செய்யத் தெரியாத வெள்ளைச் சட்டைக்காரர்கள் என்று விமர்சிக்கப்படுகிற அரசு ஊழியர்கள் தான் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். அண்ணலின் அறை கூவலுக்கு செவி சாய்த்து அரசாங்க ஊழியர்- நான்கு இளநிலை உதவியாளர்கள் சிவகங்கை அரசு அலுவலகங்களிலிருந்து பதவி விலகினர் .

  • வாழையடி வாழையென ஆதிக்கத்தினை எப்போதும் எதிர்த்து வரும் திருக்கூட்டமாய்த் திகழ்வோர், சிவகங்கை மக்கள் . 1942 ஆம் ஆண்டில் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் எனக் கேட்டதும் சிவகங்கைச் சீமை குருதி கொப்பளிக்கும் குவலயமாயிற்று. சிவகங்கையிலும் நாட்டரசன் கோட்டையிலும் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. காரைக்குடியில் 144 தடையுத்தரவை மீறிக் கூடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது..

  • விடுதலைப்போர் பற்றிய இடங்களைக் குறிப்பிட்டுக்காட்டுகிற எந்த வரைபடத்திலும் சிவகங்கை இடம் பெற்றிருப்பதைக்காணமுடிகிறது. 1857 புரட்சியைப் பற்றி டி.ரைஸ் ஹோம்ஸ் எனும் ஐரிஷ்காரர் A History of the Indian Mutiny எனும் நூலை 1883 இல் எழுதி வெளியிட்டார். அந்நூலுடன் உள்ள வரைப்படத்தில் தமிழ் நாட்டில் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட மிகச்சில ஊர்களுள் ஒன்றாக சிவகங்கை இடம் பெற்றுள்ளது. அதன்பின்பு அண்மைக்காலத்தில் 1988 இல் ஒரு வரைபடம் வந்துள்ளது. பழையபடத்திலாவது ஒரு சில ஊர்களுடன் சிவகங்கையும் குறிக்கப்பெற்றது. இந்த வரைபடத்தில் தமிழகத்தின் நான்கு ஊர் களுள் (வேலூர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை) ஒன்றாக உயர்ந்துள்ளது.

மருதுபாண்டியர்களின் வீரமும் அதனால் வந்த ஊர்பெயரும்

  • மன்னர்முத்துவடுகநாதர் காளையார்கோயிலைச்சுற்றியுள்ள காட்டிற்கு வேட்டையாடக்கிளம்பினார். மருதுபாண்டியர்களும் உடன் சென்றனர். காடி புலி, கடுவாய் என்று கொன்று குவித்தனர். அப்போது வேங்கையொன்று எதிர்பாராத வண்ணம் மன்னர்மீது சீறிப்பாயவந்தது. உடன் வந்தோர்உடனடியாய் என்ன செய்வ தென்று நிதானிக்கு முன் சின்னமருது அதன்முன்பு விழுந்து தடுத்துத் தாக்கினார்  தாக்கப்பட்ட புலி ஒரு புதரை நோக்கி ஓடியது.

  • மருதுபாண்டிய மன்னர்கள் பல சமீன் மாளிகைகளில் சுடப்பட்ட புலியைக் காலால் மிதித்தவாறு துப்பாக்கியைக் கைகளில் ஏந்தியவாறு சமீன்தார் நிற்கும் புகைப் படங்கள் பிற்காலத்தில் இடம் பெற்றன. இவர்கள் துப்பாக்கியும் கையுமாகச் சென்று தூரத்திலிருந்து புலியைச்சுட்டவர்கள். அதைத் தான் புகைப்படமாக எடுத்து மாளிகையில் மாட்டிப் பெருமையடித்துக் கொண்டனர். 

  • ஆனால் வேங்கையுடனும் வெறுங்கையுடன்தான் போர்புரிய வேணும் அதுதான் அறப்போர்; கடும் புலியுடன் மறப்போர் புரிவதும் நியாய மன்று என்பது வெள்ளை மருதின் தருமயுத்தக் கொள்கை ' ' என்று ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட வெள்ளைமருது அடிபட்டபுலி சும்மாயிராது, புதரைவிட்டு வெளியேறி சமயம் பார்த்துத் தாக்கும்' என்று பழக்கத்தால் அறிந்திருந்ததால், புலிப்பாய்ச்சலில் அதைப்பின் தொடர்ந்தார். புதர்மறைவில் ஒரு பள்ளத்தில் பாய்வதற்குத் தயாராய்ப்பதுங்கியிருந்த வேங்கைப் புலியை, வாலை வல்லபமாகப் பிடித்துத் தூக்கி தன்பலம் கொண்டமட்டும் மூச்சுப்பிடித்து ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு, ஓங்கித்தரையில் அடித்து அது மயங்கிய நிலையில் அதன் வாயைப்பிளந்து உயிரைப் போக்கினார்... உயிரோடு உள்ள புலியை வாலைப் பிடித்துச் சுழற்றும்போது எதிரி களோடு வாளைச் சுழற்றுவது போல அனாயாசத்துடன் சுழற்றுகின்ற அசுரபலம் பெரிய மருதுபாண்டியர் போன்ற அசாதாரணமான வீரர் களிடம்தான்காண முடியும்! 

  • சாதாரண வீரர்கன் நினைத்துப் பார்க்க முடியாத தீரச்செயல் அது! இன்றைக்கு நினைத்துப்பார்த்தால் கூட நம்ப முடியாதது. ஆனால் மன்னர் முத்துவடுகநாதர் அவர்முன் நடந்த அந்த அதிசயத்தை, ஆற்றலின் அரங்கேற்றத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். வெல்ஷ் கீழ்த்திசையின் நிம்ராட் எனச் சிறப்பித்துக் கூறும் முன்பே சீர்மிகு சிவகங்கைச் சீமையின் வேந்தர் மருதிருவரின் வீரத்தை அறியும் வாய்ப்பை வழங்கியது புலியை அடித்துக் கொன்ற புகழ்மிகு நிகழ்ச்சி. முத்துவடுகநாதர் உயிர் தப்பினார், அவ்விரு வீர இளைஞர்களால். புலிபதுங்கிய பள்ளம் பின்னாளில் புலிவிழுந்த பள்ளம், புலிகிடந்த பள்ளம் என வழங்கி ஒரு ஊருணியாகத் தோண்டப்பட்டு மக்களுக் குப் பயன்படுவதாயிற்று. அதற்குப் புலிவிழுந்த ஊருணி' எனப் பெயர் ஏற்பட்டது. அவ்விடத்தில் பெரிய மருதுபாண்டியர் புலியை அடித்துக்கொன்றதனால் அதனை உள்ளடக்கிய ஊர் புலியடிதம்மம் எனவும் அழைக்கப்படலாயிற்று. மன்னர் முத்துவடுகநாதர், நாட்டு மக்களும் தன் அரசவை அதிகாரிகளும் மருதுபாண்டியர்களின் ஆற்றலை அறிந்துகொண்டிருப்பர் என்று உணர்ந்தார்.


Post a Comment

Previous Post Next Post